பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி நவாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

Update: 2017-03-23 15:24 GMT
புதுடெல்லி,

பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். 
முன்னதாக பாக். தேசிய தினம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்தியா சார்பில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் கலந்து கொண்டார்.

ஜனவரி மாதம் இந்திய குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது அப்போது இந்திய குடியரசு தினத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்
ஷெரீப்  வாழ்த்து செய்தி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்