ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆதரவு

ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Update: 2017-03-30 04:03 GMT
புதுடெல்லி,

ஜாதி மறுப்பு திருமணங்கள் அதிக அளவில் நடைபெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் விருப்பம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மோகன் பகவத் இது குறித்து கூறியதாவது:- ‘நாட்டில் ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கட்டாயம் துணை நிற்க வேண்டும். பொதுவாகவே இது போன்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் துணைநிற்பர். ஏனெனில் ஆர்.எஸ்.எஸ்  அமைப்பினரில் பெரும்பாலானோர் ஜாதி மறுப்பு செய்து கொண்டவர்கள்தான். சமூக சமுத்துவத்தில் ஆர்வம் கொண்டவர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்களேயானால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அம்சங்களை அவர்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான நிதிகள் வழங்கப்பட்டாலே அது பெரிய நன்மையாக இருக்கும் இது போன்ற நடவடிக்கைகளே, அந்த சமூகத்தினரின் பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அரசாங்கத்தில் இருந்தால் இந்த விஷயத்தில் அவர்கள் கட்டாயம் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்