வேலை நிறுத்தம் தொடரும் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

மத்திய மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தம் தொடரும் லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

Update: 2017-04-07 23:29 GMT

ஐதராபாத்,

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வை திரும்ப பெறக்கோரி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த மாதம் 30–ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனையடுத்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இந்தியா முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மத்திய மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வேலைநிறுத்தம் தொடரும் என்று தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகப்பா தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்