போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மானபங்கம்

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை மானபங்கம் செய்த பேக்கரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-04-09 21:52 GMT

மும்பை

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை மானபங்கம் செய்த பேக்கரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பெண் போலீஸ் மானபங்கம்

மும்பை மாகிம், சோட்டா தர்க்கா அருகே சம்பவத்தன்று மாலை 50 வயது போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது தாதரில் இருந்து பாந்திரா நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் ஹெல்மட் அணியாமல், செல்போனில் பேசியபடி சென்றார். இதை கவனித்த போக்குவரத்து பெண் போலீஸ், அந்த வாலிபரை தடுத்து நிறுத்தினார். ஆனால் வாலிபர் நிற்காமல் அங்கு இருந்து தப்பிச்செல்ல முயன்றார். மேலும் தன்னை பிடிக்க முயன்றால் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்து விடுவதாக பெண் போலீசை மிரட்டினார்.

ஆனாலும் அவரது மிரட்டலுக்கு பயப்படாத பெண் போலீஸ், அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். இதையடுத்து அந்த வாலிபர் பெண் போலீசை அவதூறாக பேசி, மானபங்கம் செய்தார்.

பேக்கரி உரிமையாளர்

தகவல் அறிந்து அங்கு சென்ற மாகிம் போலீசார் பெண் போலீசை மானபங்கம் செய்த வாலிபரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர் மாகிம் பகுதியில் பேக்கரி நடத்தி வரும் அன்சாரி(வயது 25) என்பது தெரியவந்தது.

அன்சாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்