கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாய் செல்லும் விமானத்தின் டயர் வெடித்தது

என்ஜின் கோளாறு காரணமாக, ஓடுபாதையை விட்டு விமானம் விலகி சென்றதுடன், விமானத்தின் இடதுபக்க உள்புற டயர், ஓடுபாதை விளக்கில் மோதி வெடித்தது.

Update: 2017-04-24 22:15 GMT
கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து 191 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று, நேற்று துபாய்க்கு புறப்பட தயாரானது. விமானத்தை ஓடுபாதைக்கு கொண்டு வந்த பிறகு, அது மேலே எழும்ப தயாரான நிலையில், என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.

என்ஜின் கோளாறு காரணமாக, ஓடுபாதையை விட்டு விமானம் விலகி சென்றதுடன், விமானத்தின் இடதுபக்க உள்புற டயர், ஓடுபாதை விளக்கில் மோதி வெடித்தது.

நல்லவேளையாக, விமானி விமானத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால், 191 பயணிகளும், சிப்பந்திகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். என்ஜின் கோளாறால், விமானத்தின் சில உட்புற பாகங்கள் உடைந்து, ஓடுபாதையில் சிதறி விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்துவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆனதால், 4 விமானங்களின் பயணம் தாமதம் ஆனது.

மேலும் செய்திகள்