ஊழலில் ஈடுபடும் ரெயில்வே அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பிரதமர் மோடி உத்தரவு

ஊழலில் ஈடுபட்டதாக கண்டறியப்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவு.

Update: 2017-04-26 22:14 GMT
புதுடெல்லி,

பல்வேறு அரசு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ‘பிரகதி’ என்ற திட்ட ஆலோசனை கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது நடத்தி வருகிறார். நேற்று இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், ரெயில்வே, சாலை மற்றும் மின் துறைகளில் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மோடி ஆய்வு செய்தார். அவற்றில், திருப்பதி–சென்னை நெடுஞ்சாலை திட்டமும் அடங்கும்.

இக்கூட்டத்தில் பேசும்போது, ‘ரெயில்வே அதிகாரிகள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன. ஊழலில் ஈடுபட்டதாக கண்டறியப்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். மேலும், ரெயில்வே தொடர்பான அனைத்து குறைகள் மற்றும் விசாரணைக்காக ஒரே தொலைபேசி எண்ணை உருவாக்க பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

நாட்டின் 75–வது சுதந்திர தினத்துக்குள், நாடு பெரும் மாற்றம் அடைய உறுதியான திட்டம் வகுக்குமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களையும் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்