திருப்பதி தேவஸ்தானமும் டாடா டிரஸ்ட்டும் இணைந்து புற்றுநோய் மருத்துவமனையை கட்டுகின்றன

திருப்பதி திருமலா தேவஸ்தானமும் டாடா டிரஸ்டும் இணைந்து புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை திருப்பதியில் கட்டுகின்றன.

Update: 2017-05-05 11:15 GMT
திருப்பதி

இது தொடர்பாக வாரியத்தின் நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் கூறுகையில், “திருப்பதியை மருத்துவ மையமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும். திருப்பதியில் ஏற்கனவே இரு உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ளன. அனைவருக்கும் முன்னதாக அரவிந்த் கண் மருத்துவமனை தனது புதிய மருத்துவமனையை துவங்க முன்வந்துள்ளது. இன்னும் 15 நாட்களில் மருத்துவமனையின் கட்டட வேலை துவங்கும். இதனிடையே டாடா டிரஸ்ட் புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது. மும்பை, கொல்கத்தாவில் ஏற்கனவே இரு மருத்துவமனைகளை டாடா டிரஸ்ட் நடத்தி வருகிறது. அடுத்த இரு வருடங்களுக்குள் நமக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை கிடைத்துவிடும்” என்றார் அவர். சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், ரூ.140 கோடி மதிப்பீட்டில் இம்மருத்துவமனை உருவாகி வருகிறது.

இம்மருத்துவமனையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் டாடா டிரஸ்ட்டின் தலைமை நிர்வாகியான வெங்கட்ரமணன் இது பற்றி கூறுகையில் நாட்டின் பெரிய மத நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய நோக்கம் குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றை நிறுவுவதேயாகும்” என்றார்.

மேலும் செய்திகள்