மத்திய பிரதேசத்தில் கடும் வறட்சி கடன் நெருக்கடியால் விவசாயி தற்கொலை!

கடன் தொல்லை காரணமாக மத்திய பிரதேசத்தில் விவசாயி தற்கொலை.

Update: 2017-06-22 07:40 GMT
போபால்,

மத்திய பிரதேசம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வன்முறையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு விவசாயிகள் சுட்டு கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.

இதனிடையே விவசாயிகள் பலர் கடனை திருப்பி செலுத்த இயலாமல் தற்கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சம்பவம் அதிகரித்து வருவதால் மத்திய பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இது போன்ற போன்ற விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய பிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் மண்ட்சோர் பகுதியில் நடந்துள்ளது. அங்கு விவசாயி ஒருவர் சங்கர் உதய்நியா என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்திய பிறகும் தொந்தரவு செய்ததால் நெருக்கடியை தாங்க  முடியாமல் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

மேலும் செய்திகள்