உத்தரபிரதேசத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ராம்நாத் கோவிந்த் ஆதரவு கோரினார்

ஜனாதிபதி தேர்தல் வருகிற 17–ந்தேதி நடக்கிறது. இதில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கடந்த 23–ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். தனக்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோருவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல அவர் முடிவு செய்துள்ளார். முதல்

Update: 2017-06-25 21:19 GMT

லக்னோ,

ஜனாதிபதி தேர்தல் வருகிற 17–ந்தேதி நடக்கிறது. இதில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கடந்த 23–ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். தனக்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோருவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல அவர் முடிவு செய்துள்ளார்.

முதல்கட்டமாக தனது சொந்த மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்திற்கு நேற்று அவர் சென்றார். லக்னோவில் உள்ள முதல்–மந்திரி ஆதித்யநாத் வீட்டிற்கு சென்ற ராம்நாத் கோவிந்த், அங்கு ஆளும் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடமும், எம்.பி.க்களிடமும் ஆதரவு கோரினார்.

இந்த சந்திப்பின்போது, மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, உமாபாரதி, பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் புபேந்திரா யாதவ் மற்றும் உத்தரபிரதேச துணை முதல்–மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்