65 வயது ஷேக்கை மணமுடித்த 16வயது இந்தியச் சிறுமி

65 வயது ஓமன் ஷேக்கை மணமுடித்த 16வயது இந்தியச் சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-08-17 08:13 GMT

ஐதராபாத்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவைச் சேர்ந்தவர் சையதா உன்னிசா. இவர் ஓமனைச் சேர்ந்த ஷேக் அஹமதை (65) திருமணம் செய்து கொண்ட தனது மகளை(16) மீட்டுத் தருமாறு பலகுனுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது கணவரின் சகோதரி கவுசியா மற்றும் அவரது கணவர் சிகந்தர் ஆகியோர் மீது குற்றம்சாட்டியுள்ளார். ஓமனைச் சேர்ந்த ஷேக் அஹமத், ரம்ஜானிற்கு முன்பு ஐதராபாத் வந்ததாகவும், அப்போது ஷேக்கை தனது மகள் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஐதராபாத் அருகே பர்காசில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிகந்தர் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்து சிறுமியை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் இருவரும் ஓமனிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து தனது மகளை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டதற்கு, கொடுத்த பணத்தை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஓமனில் சொகுசான வாழலாம் என்று கூறி, சில வீடியோக்களை சிகந்தர் சிறுமியிடம் காட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மகளுக்கான பணத்தை தருமாறு சிகந்தரிடம் பலமுறை கூறியும், மீட்டுத் தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உன்னிசா கூறியுள்ளார். மேலும் தான் மிரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்