சுபாஷ் போஸ் குறித்த செய்திக்கு உறவினர்கள் கண்டனம்

சமீபகாலமாக சுபாஷ் சந்திர போஸ் குறித்து சமூக வலைத்தளங்களிலும், முக்கிய ஊடகங்களிலும் காணப்படும் செய்திக்கு அவரது உறவினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2017-09-24 15:11 GMT
கொல்கதா

நேதாஜி என்று மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் தலைவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணத்துடன் சில தீய நோக்கம் கொண்ட நபர்களும், குழுக்களும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருவதாக போஸ் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறினர்.

கும்னாமி பாபா எனும் பெயர் கொண்ட சாது ஒருவரை நேதாஜி என்று கூறி வருவது பற்றி குறிப்பிட்ட அவர்கள் நீதிபதி முகர்ஜி விசாரணைக்குழு மரபணு பரிசோதனை மூலம் இறுதியாக கும்னாமி பாபா என்பவர் நேதாஜியல்ல என்று தெரிவித்தப்பிறகும் தவறாக தகவல் பரப்புவதாக தெரிவித்தனர். ”இது முற்றிலும் தவறான தகவல்” என்றார் பேராசிரியர் துவரகா நாத் போஸ். கும்னாமி பாபாவின் புகைப்படங்கள் ஏதுமிருப்பதாக தெரியவில்லை. ஆனால் நேதாஜியை பாபாவாக சித்தரிக்கும் பார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களேயுள்ளன என்றார் அவர். இதைச் சட்டப்படி சந்திக்கவும் தகுதி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

”நாடு நேதாஜியின் தலைமைக்கு ஏங்கிக் கொண்டிருந்த காலத்தில் முப்பதாண்டுகளுக்கு மேலாக அவர் தனிமையில் வாழ்ந்தார் என்பது அபத்தமான கருத்து” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்