காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமனம்: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-23 13:24 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராஜ்நாத்சிங் கூறியதாவது:-, ''காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா இதற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1979-வது பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சர்மா, 2014- 16 வரை உளவுத்துறை இயக்குநராகப் பணியாற்றியவர். காஷ்மீர் தலைவர்கள் யாருடனெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்” இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் செய்திகள்