பாகிஸ்தானில் அச்சிட்டு வந்த ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு ரூ.900–க்கு விற்பனை

பாகிஸ்தானில் அச்சிட்டு வந்த ரூ.2 ஆயிரம் அச்சு அசலான கள்ள நோட்டு ரூ.900–க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகளை டெல்லியில் சப்ளை செய்ய வந்த ஒருவர் சிக்கினார்.

Update: 2017-11-18 23:30 GMT

புதுடெல்லி,

கிழக்கு டெல்லியில் ஆனந்த் விகார் பகுதியில் கள்ள நோட்டுகளை வாங்குகிற ஒருவருக்கு 16–ந்தேதி ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை சப்ளை செய்வதற்கு ஒருவர் வரப்போவதாக டெல்லி சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் வந்த ஒருவரை மடக்கிப்பிடித்து சோதனை போட்டனர். அப்போது அவரிடம் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக இருப்பதை கண்டனர். அவரை உடனே கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் 330–ஐ கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர், காஷித் (வயது 54). இவர் மேற்கு வங்காள மாநிலம், மால்டா பகுதியை சேர்ந்தவர்.

மேலும் செய்திகள்