சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் - ராம்நாத் கோவிந்த்

சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Update: 2017-11-30 10:40 GMT
புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மிசோரம் மாநில சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகளாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு அரசியல் போட்டியாளர் அவர் எதிரி இல்லை.  சட்டமன்றத்தின் செயல்பாடுகள் கண்ணியமும் நல்லொழுக்கமும் கொண்டதாக இருக்க வேண்டும். சண்டைகள் உருவாதை அரசியல் கட்சிகள் அனுமதிக்ககூடாது. 

தேர்தலுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் அவர் சார்ந்த தொகுதியை வளர்ச்சி அடைய வைக்க வேண்டும்.  சட்டமியற்றுபவர்கள் ஒரு ஜனநாயக அரசியலின் அழகு,  மிசோராமில் இத்தகைய இயல்பான அங்கீகாரம் இருப்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்