இந்தோ-பாகிஸ்தான் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்

இந்தோ-பாகிஸ்தான் போரில் ஈடுபட்ட நமது ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Update: 2017-12-16 09:18 GMT

புதுடெல்லி,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போரானது கடந்த 1971ம் ஆண்டு இதே நாளில் முடிவுக்கு வந்தது.  இதனை தொடர்ந்து வங்காளதேசம் என்ற தனி நாடு உருவானது.

இந்த போரின் முடிவில் பாகிஸ்தான் நாட்டின் 90 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவம் முன் சரண் அடைந்தனர்.  போர் முடிவுக்கு வந்த இந்த நாள் வெற்றி திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 1971ம் ஆண்டில் வெற்றி திருநாளான இதேநாளில் ஈடு இணையில்லாத தைரியமுடன் போரிட்டு விடாமுயற்சியுடன் நமது நாட்டை காத்த அனைவருக்கும் நாம் வணக்கத்தினை செலுத்துவோம்.

அவர்களது வீரம் மற்றும் சேவைக்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்