‘இந்தியா பலவீனமான நாடு அல்ல’ ராணுவ தளபதி பேட்டி

‘இந்தியா பலவீனமான நாடு அல்ல’ ராணுவ தளபதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

Update: 2018-01-12 22:45 GMT

புதுடெல்லி,

இந்திய ராணுவ தினத்தையொட்டி ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா பலம் வாய்ந்த நாடுதான். அதேநேரம் இந்தியாவும் பலவீனமான நாடு அல்ல. சீனா அளிக்கும் அழுத்தத்தை சமாளிக்க இந்தியாவும் தயாராகி இருக்கிறது. நாட்டின் வட பிராந்திய எல்லையில் சில பலவீனமான பகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றின் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் நமது கண்களும், காதுகளும் எப்போதும் திறந்திருக்கின்றன. நமது பகுதிக்குள் யாரையும் ஊடுருவ நாங்கள் அனுமதிக்கமாட்டோம்’ என்றார்.

எல்லை பகுதியில் அமைதியை பராமரிக்க சீனாவுடன் தூதரக ரீதியான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்த பிபின் ராவத், இதற்கு பிற நாடுகளின் ஆதரவையும் பயன்படுத்தலாம் என்றும் கூறினார். நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை விட்டு விலக அனுமதிக்கமாட்டோம் என்றும், இந்த நாடுகளுடனான நமது ராணுவ ஈடுபாடு மிகச்சிறப்பாக உள்ளதாகவும் ராணுவ தளபதி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்