தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. #delhihighcourt | #AamAadmiParty

Update: 2018-01-23 06:56 GMT
புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் எம்.எல்.ஏ.க்களாக இருந்த 20 பேர், பாராளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தனர். எனவே ஆதாயம் பெறும் இரட்டை பதவி தடை சட்டத்தின் கீழ் அவர்களது பதவியை பறிக்குமாறு ஜனாதிபதிக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைத்தது. இதை ஏற்று அந்த எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், பதவி நீக்க உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் தங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன் உரிய முறையில் சட்ட விதிகள் பரிசீலிக்கப்படவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை, எனவே பதவி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்