சர்வதேச எல்லையில் பயங்கரவாத ஊடுருவலை எல்லைப் பாதுகாப்பு படை முறியடித்தது

ஜம்முவில் சர்வதேச எல்லையில் பயங்கரவாத ஊடுருவலை எல்லைப் பாதுகாப்பு படை முறியடித்தது. #BSF

Update: 2018-02-26 10:20 GMT

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையை உருவாக்க பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை அனுப்பி வருகிறது. இந்தியா ராணுவம் பாகிஸ்தானின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தும் வருகிறது. இன்று சம்பா மாவட்டத்தில் ஊடுருவலை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை முறியடித்தது என போலீஸ் கூறிஉள்ளது. சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் காலை 5 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான நகர்வை எல்லைப் பாதுகாப்பு படை கவனித்தது. எல்லைப் பாதுகாப்பு படை அவர்களை விரட்ட துப்பாக்கி சூடு நடத்தியது. 

பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ முடியாது என்ற நிலையில் திரும்பி சென்றனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“எல்லையில் பயங்கரவாத ஊடுருவலை முறியடிக்க படைகள் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது,” என எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்து உள்ளார். 

சர்வதேச எல்லையில் கடந்த 23-ம் தேதி எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பாகிஸ்தான் படை அதிகாரிகள் இடையே கொடி கூட்டம் நடைபெற்றது. அப்போது எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக இருதரப்பிலும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்