அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பற்றி பேச கே.சி.பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.;

Update:2018-04-18 04:30 IST

புதுடெல்லி,

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி ஐகோர்ட்டுக்கு இதற்காக வந்திருந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாக இருந்த கே.சி.பழனிசாமி தற்போது, ‘அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியே கிடையாது, எனவே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று கேட்டிருக்கிறாரே என்று கேட்டனர்.

அதற்கு சி.வி.சண்முகம், ‘இந்த வழக்கில் கே.சி.பழனிசாமியுடன் நாங்கள் இல்லை. அவராக ஒட்டிக்கொண்டார். அவர் அ.தி.மு.க.காரர் என்பதை நாங்கள் என்றைக்கும் ஏற்றுக்கொண்டதே இல்லை. ஜெயலலிதாவால் 1994–ம் ஆண்டு கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் அவர். பின்னர் கட்சி பிளவுபட்டபோது வந்தார். அ.தி.மு.க. பற்றியும், ஒருங்கிணைப்பாளர் பற்றியும் சொல்ல அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை’ என்று பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்