புதிய வருமான வரிச் சட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

புதிய வருமான வரிச் சட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.;

Update:2026-01-05 01:47 IST

புதுடெல்லி,

நடப்பு ஆண்டில் புதிய வருமான வரிச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரவுள்ளநிலையில் இதற்காக ஆயத்த பணிகளில் ஈடுபட வருமானவரித்துறையினருக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் தலைவர் ரவி அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பணியாளர்களுக்கு அவர் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து செய்தியில் புதிய வருமான வரி சட்டத்திற்கான புதிய விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் படிவங்களை விரைந்து உருவாக்குமாறும் வலியுறுத்தினாார். 1961-ம் ஆண்டு முதல் அமலில் உள்ள வருமான வரிச்சட்டம் இந்தாண்டில் திருத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

புதிய வரி மாற்றம் வரி விதிகளை எளிதாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் கூட வருமான வரியை பற்றி நன்றாக புரிந்துகொண்டு சிரமமின்றி வரி செலுத்த முடியும். புதிய சட்டத்தின் அடிப்படை அமைப்பு ஆனது அப்படியே தான் இருக்கும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது, ஆனால் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். இது வரி தொடர்பான சர்ச்சைகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்