சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் என சந்தேகம்: ஜம்முவில் பாதுகாப்பு அதிகரிப்பு

சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, ஜம்முவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-05-14 08:10 GMT
ஜம்மு,

ஜம்முவின் கதுவா மாவட்டத்தில்  உள்ள சர்வதேச எல்லையில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, ஜம்மு பகுதியில் உச்சகட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வரும் மே 19 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் வரவுள்ள நிலையில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கதுவா, சம்பா, ஜம்மு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு நிலைகளில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து நான்கு முதல் 5 பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகப்படுகிறது.

செக்போஸ்ட்களில் வாகனங்கள் தீவிர தணிக்கை செய்யப்படுகின்றன. கதுவா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்