ஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் எங்கள் ஆதரவை ஏற்று கொண்டது -குலாம் நபி ஆசாத்

மதசார்பற்ற ஜனதா தளம் எங்கள் ஆதரவை ஏற்று கொண்டது. நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை உள்ளது என காங்கிரஸ் கூறி உள்ளது. #KarnatakaElections #Congress

Update: 2018-05-15 10:10 GMT
பெங்களூரு

கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாரதீய ஜனதா 106 தொகுதிகள் வரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது எந்த கட்சிக்கும் கிடைக்காத பட்சத்தில் மதசார்பற்ற ஜனதாதளமே முதல்வரை முடிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ற  ஜனதா தளத்திற்கு 38 இடங்கள் வரை கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி 38 இடங்கள் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 78 இடங்கள் வரை வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 78 இடங்கள் முன்னிலையில் உள்ளது. 

இதை தொடர்ந்து  கர்நாடகாவில் காங்கிரஸ்  ஆட்சியை தக்கவைக்க முதல் அமைச்சர் பதவியை  குமராசாமிக்கு விட்டுதர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக  முதல்வர் சித்தராமையா வீட்டில் ஆலோசனை நடைபெற்றது.  மதசார்பற்ற ஜனதா தள தலைவர்களுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-

"நாங்கள் தேவேவுடா ஜி உடன் தொலைபேசியில் பேசினோம்  மற்றும் குமாரசாமியுடனும் பேசி  உள்ளோம்  அவர்கள் எங்கள் வாய்ப்பை ஏற்றுக்கொண்டனர். நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

மதசார்பற்ற ஜனதா தளம்  ஆட்சி அமைக்க காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயார். கவர்னரை இன்று மாலை சந்திக்க உள்ளோம். கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வந்த பின் ஆட்சி அமைக்க உரிமை கோரி மஜதவுடன் இணைந்து ஆளுநரிடம் கடிதம் அளிப்போம் என கூறினார்.

மேலும் செய்திகள்