கூட்டத்திற்கு வர காலதாமதம்; சிட் அப் செய்த இரு வருவாய் ஆய்வாளர்கள் ஆட்சியரிடம் புகார்

ஒடிசாவில் கூட்டம் ஒன்றிற்கு வர காலதாமதம் செய்த 2 வருவாய் ஆய்வாளர்களை நீதிபதி ஒருவர் சிட் அப் போட செய்துள்ளார். #RevenueInspectors

Update: 2018-05-17 10:49 GMT

கட்டாக்,

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் வருவாய் வட்ட அளவில் சீராய்வு கூட்டம் ஒன்று நடந்துள்ளது.  கூடுதல் மாவட்ட நீதிபதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட 2 வருவாய் ஆய்வாளர்கள் 15 நிமிடம் காலதாமதத்துடன் வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீதிபதி வசந்த குமார் மற்றவர்கள் முன் சிட் அப் போட செய்துள்ளார்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு பேரும் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளனர்.  இதுபற்றிய விசாரணையில், சம்பவம் நடந்தது உண்மை என தெரிய வந்துள்ளது என ஆட்சியர் ரகு கூறியுள்ளார்.  நீதிபதியின் இதுபோன்ற நடத்தை விரும்பதகாத ஒன்று.  அவர் வருவாய் ஆய்வாளர்கள் குழு ஒன்றின் முன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இது அவமரியாதைக்குரிய அனுபவம்.  நான் இன்னும் அதிர்ச்சியான நிலையிலேயே உள்ளேன் என குப்தி பகுதி வருவாய் ஆய்வாளர் கருணாகர் மல்லிக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்