மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி

முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்தன.

Update: 2018-05-17 21:45 GMT

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 9 ஆயிரத்து 270 கிராம பஞ்சாயத்து இடங்களை அந்தக் கட்சி கைப்பற்றி உள்ளது.

பெரும்பான்மையான மாவட்டங்களில் பா.ஜனதா கட்சி 2–வது இடத்தில் உள்ளது. இந்தக் கட்சிக்கு 2 ஆயிரத்து 79 இடங்கள் கிடைத்து உள்ளன. 200 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி 562 கிராம பஞ்சாயத்து இடங்களை பிடித்ததுடன், 113 இடங்களில் முன்னிலை பெற்று இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி 315 இடங்களில் வெற்றி பெற்றது. 61 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. சுயேச்சைகள் 707 இடங்களில் வெற்றி பெற்றனர். 120 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

பஞ்சாயத்து சமிதிகளிலும் 95 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் 10 இடங்களில் வெற்றி பெற்றது, 25 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.

மேலும் செய்திகள்