கற்பழிப்பு வழக்கில் கைதான பாதிரியாருக்கு ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு

கேரளாவில் கற்பழிப்பு வழக்கில் கைதான பாதிரியாருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-23 22:00 GMT
கொச்சி,

கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம் கொளஞ்சேரி என்ற இடத்தில், பாவமன்னிப்பு கோர வந்த பெண்ணை கற்பழித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் 4 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் கடந்த 13-ந் தேதி கைதான ஜான்சன் மேத்யூ என்ற பாதிரியாருக்கு திருவள்ளாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து அவர் கொச்சியில் உள்ள கேரள ஐகோர்ட்டில், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ராஜவிஜயராகவன், பாதிரியார் ஜான்சன் மேத்யூவுக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். அத்துடன் அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்து உள்ளார்.

மேலும் செய்திகள்