ராஜஸ்தான் விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணியால் பரபரப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை 10.40 மணிக்கு ஒரு விமானம் புறப்பட இருந்தது.

Update: 2018-08-05 22:30 GMT

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை 10.40 மணிக்கு ஒரு விமானம் புறப்பட இருந்தது.

இந்த விமானத்தில் பயணிப்பதற்காக ஜெய்ப்பூரை சேர்ந்த ஜே.பி.சவுத்திரி என்பவர் வந்தார். விமான நிலையத்தில் அவரிடம் தனியார் விமான நிறுவன ஊழியர்கள் சோதனை செய்தனர்.

அப்போது அவருக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து ஜே.பி.சவுத்திரி தன்னுடைய பையில் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே விமான நிறுவன ஊழியர்கள் அவருடைய பையை சோதனையிட்டனர். ஆனால் அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை. இதையடுத்து வேண்டுமென்ற அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து புரளியை கிளப்பியது தெரியவந்தது.

இதையடுத்து விமான நிறுவன ஊழியர்கள் அவருடைய பயணத்தை ரத்து செய்து, அவரை போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்