பாகிஸ்தான் தளபதியை கட்டி அணைத்த சித்து மீது தேசத் துரோக வழக்கு

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியை கட்டி அணைத்ததற்காக நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக, தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-08-21 09:40 GMT
ஜலந்தர்

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக, இம்ரான் கான் பதவியேற்ற விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸை சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். அப்போது, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியை, நவ்ஜோத் சிங் சித்து கட்டி அணைத்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. சித்துவின் இந்த செயலுக்கு, பா.ஜ.,வினர் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

காங்கிரசைச் சேர்ந்த, பஞ்சாப் மாநில முதல்வரும், முன்னாள் ராணுவ தளபதியுமான, அமரீந்தர் சிங், சித்துவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக, தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்