விநாயகர் சதுர்த்தி விழா: பிரதமர் மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-13 01:29 GMT
புதுடெல்லி,

இந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி மாதம் 28 -ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மோடி வாழ்த்துச்செய்தியை வெளியிட்டதோடு விநாயகர் படத்தையும் பகிர்ந்துள்ளார். ”விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்