அதிகாரிகளுக்கு பயந்து செல்போனை விழுங்கிய சிறைக்கைதி வயிற்றுவலியால் துடிப்பு
சோதனையின் போது அதிகாரிகளுக்கு பயந்து செல்போனை விழுங்கிய சிறைக்கைதி வயிற்றுவலியால் துடித்து உள்ளார்.;
கொல்கத்தா
கொல்கத்தாவில் உள்ள பிரெஸிடென்சி சிறைச்சாலையில் ராமசந்திரா என்ற கைதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.அவருக்கு வலி அதிகரிக்கவே உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் ராமசந்திராவின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருத்தது.
அதிகாரிகளின் திடீர் சோதனையின்போது சிக்கிய ராமசந்திரா தன்னிடமிருந்த போனை மறைக்க அதை விழுங்கியுள்ளார். இதனால்தான் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
கைதி போனை விழுங்கியது எக்ஸ்ரேவில் தெரியவந்துள்ளது. பிறகு அவர் அங்கிருந்து நேற்று எம்.ஆர் பாங்கூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
7 செமீ அளவுள்ள போனை விழுங்கியுள்ளார் என்பது எக்ஸ்ரே சோதனையில் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் குடல் இயக்கம் வழியாகப் போனை வெளியில் எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அது முடியாமல் போனால் கைதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்