உலகின் மாசு அடைந்த நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாகும்

உலகின் மாசு அடைந்த நகரங்களில் முதல் 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாகும்.

Update: 2018-10-22 11:23 GMT
ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான  சீனா, நீண்ட காலமாக  மாசு காற்றோடு போராடி வருகிறது. சமீபத்தில் அண்டை நாடான இந்தியாவும்  மாசுகாற்றுடன் போராடி வருகிறது. தெற்காசிய  நாடுகளில் தான் உலகின் 10 மாசுபடுத்தப்பட்ட நகரங்களைக் கொண்டுள்ளது .

வட இந்தியாவின் தூசி நிறைந்த சமவெளிகளில் குளிர்காலம் வரும் வரையில், வரும் வாரங்களில் மோடி அரசாங்கம் மாசுபாடு குறித்த கொள்கைகளை சோதனைக்கு உட்படுத்த  உள்ளது.  கடுமையான கொள்கைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால்,   இந்திய குடிமக்கள் மற்றும் அரசாங்கம் மிகவும் பணக்காரர்களாக இருக்கும். உலக வங்கியின் கணக்கீடுகளால், சுகாதார பராமரிப்பு கட்டணம் மற்றும் மாசுபாட்டின் உற்பத்தித்திறன் இழப்புகள் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5 சதவிகிதத்தை செலவழிக்கின்றன என கூறப்படுகிறது.

இந்தியா தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாக உள்ளது.  சீனாவின் பொருளாதாரமானது ஐந்து மடங்கு  ($ 12.2 டிரில்லியன்)  பெரியதாக உள்ளது.

தெற்காசிய நாடு இன்னும் அடிப்படை உற்பத்தியை ஊக்குவிப்பதில் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது, இதனால்  மாசுபாடு மோசமடையக்கூடும் என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ரக்பெந்திரா ஜா கூறின் உள்ளார். ஒரு மென்மையான மாற்றத்தை எடுத்துக்கொள்வது மிகவும் எளிது " இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை சுத்தப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இரண்டு தசாப்த கால விரிவாக்கத்திற்கு  பின்னர், உலக பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட்டு, சீனா மாசு கட்டுக்பாட்டை கடைபிடித்து வருகிறது. அதன் நகரங்களை ஆய்வு செய்யும் போது  அவர்கள் முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறார்கள்.

சீனாவின் பீஜ்ஜிங் நகரம் மாசைகுறைத்து காற்றை சுத்தபடுத்துவதில்,  முன்னேற்றம் கண்டு உள்ளார். ஆனால் டெல்லியில் காற்று மிகவும் அபாயகரமான நிலையை எட்டி உள்ளது.

காற்று தரத்தைக் கண்காணித்ததில்   2015 ஆம் ஆண்டில் 66 ல் இருந்து 2017 ஆம் ஆண்டில் புதுடெல்லியில் 84 ஆக உயர்ந்தது, "அபாயகரமான" நாட்களின் எண்ணிக்கை அல்லது மோசமான நிலை அடைந்து உள்ளது. பெய்ஜிங்கில் இதே காலப்பகுதியில் சுமார் 20  நாட்களில் அளவு 43  ஆக இருந்தது.

உலகின் மாசு அடைந்த நகரங்களில் முதல் 20 நகரங்களில்  15 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாகும். 

மேலும் செய்திகள்