தெலுங்கானா தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்க திட்டம்: ரூ.7½ கோடி ‘ஹவாலா’ பணம் பறிமுதல் 4 தரகர்கள் கைது

ஐதராபாத்தில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 51 லட்சம் ‘ஹவாலா’ பணம் சிக்கியது.

Update: 2018-11-07 22:58 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, நேற்று ஐதராபாத் போலீசின் பல்வேறு பிரிவினரும், தேர்தல் பறக்கும் படையினரும் பல்வேறு இடங்களில் கூட்டாக நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 51 லட்சம் ‘ஹவாலா’ பணம் சிக்கியது. ஹவாலா தரகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரின் வீட்டில் இருந்து கைத்துப்பாக்கியும் சிக்கியது.

இந்த பணம் சிக்கியது பற்றி வருமான வரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் கூறினார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ‘ஹவாலா’ முறையில் இப்பணம் கொண்டுவரப்பட்டு இருப்பதாக கமிஷனர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்