மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் செல்போன் செயலி அறிமுகம்

மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-13 10:12 GMT
அமெரிக்காவின் இண்டர்மைவுண்டைன்  இதய ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஆபிற்கு,  அலைவ்கோர்  என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆப் மாரடைப்பு குறித்த தகவல்களை இசிஜி இயந்திரம் அளவிற்கு துல்லியமாக தருகின்றன. முதற்கட்டமாக, 204 பேரிடம், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் கருவி ஒன்றை செல்போனில் பொருத்திவிட்டு, அதன் மீது விரல்களை வைத்தால், நமது இதயத்துடிப்பை கண்டறிந்து, தமணிகளில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதை அலைவ்கோர்  கண்டுபிடித்து வருகிறது. இதன் மூலம், மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிந்து அதனை சரிசெய்ய முடியும் என வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்