நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது -ராகுல் காந்தி

நாடு மக்களால் நடத்தப்படுகிறது. ஒரு மனிதரால் அல்ல என்பது கூட மோடிக்கு தெரியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Update: 2018-11-13 11:29 GMT
பலோடா பஜார்,

சத்தீஷ்காரில் முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.  இதில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, மோடி பிரதமரான 2014-ம் ஆண்டுக்கு பின்னரே நாட்டின் வளர்ச்சி தொடங்கியது என மோடி கூறி வருகிறார்.

அவருக்கு, மக்களால் நாடு நடத்தப்படுகிறது என்றும் ஒரு மனிதரால் அல்ல என்பது கூட தெரியவில்லை.  இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு அவர் உங்களை புண்படுத்தி வருகிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தியது ஆகியவற்றால் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் முடங்கினர்.  காங்கிரஸ் கட்சியானது இளைஞர்கள் வர்த்தகம் செய்ய, வங்கிகளில் இருந்து கடன் பெற ஊக்குவிக்கும் என கூறினார்.

சில தொழிலதிபர்களுக்கு பணி செய்வதற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சியானது சத்தீஷ்காரின் வேளாண், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக பணியாற்றும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்