சத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்: 72 சதவீதம் வாக்குப்பதிவு

சத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தலில், 72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

Update: 2018-11-20 17:07 GMT
ராய்பூர்,

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் சுமார் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

 2-வது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குபதிவு நடந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.  இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வாக்குபதிவு நடைபெறும் 72 தொகுதிகளில் மொத்தம் 1,101 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 18 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது. இதில் தாம்தரி, சரியாபாத் ஸ்பூர், பில்ராம்பூர், மக சம்ண்ட், தபிர்தம் ஆகிய மாவட்டங்கள் நக்சலைட்டுகள் நிறைந்த பகுதியாகும். அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், 72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்