இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பியவரிடம் ஆவேசமடைந்த சந்திரசேகர் ராவ் - தெலுங்கானாவில் பரபரப்பு

தெலுங்கானாவில் இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பியவரிடம் சந்திரசேகர் ராவ் ஆவேசமடைந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-30 21:30 GMT
ஐதராபாத்,

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த தீர்மானம் மீது இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தெலுங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்தில் மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரிடம், இந்த இடஒதுக்கீடு குறித்த பரிந்துரையின் தற்போதைய நிலை என்ன? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இது சந்திரசேகர் ராவுக்கு மிகுந்த ஆத்திரத்தை அளித்தது. உடனே அவர் அந்த நபரிடம் கோபமடைந்தார். ‘என்ன பேசுகிறாய்? அமைதியாக இரு. எந்த 12 சதவீதம்? ஏன் அவசரப்படுகிறாய்? நான் உன் தந்தையிடம் சொல்வேன்’ என்று ஆவேசமாக பதிலளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்திரசேகர் ராவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்