பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் மீது தாக்குதல்

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Update: 2018-12-06 15:05 GMT


கொல்கத்தா,


2019-ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் மூன்று நாட்கள் யாத்திரையை மேற்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் ஐகோர்ட்டு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. முன்னதாக பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவருடைய கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டார்கள். இவ்விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகத்தை மூடிக்கொண்டிருந்த சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இச்சம்பவத்தை கண்டித்து பா.ஜனதாவினர் தரப்பில் போராட்டமும் நடைபெற்றது.

“என்னுடைய காரை தாக்கியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான், தாக்குதல் சம்பவத்தினால் எங்களுடைய தொண்டர்கள் காயம் அடைந்துள்ளனர்,” என திலீப் கோஷ் கூறியுள்ளார். 

பா.ஜனதா தலைவர் முகுல் ராய் பேசுகையில், “போலீஸ் முன்னிலையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். நாங்கள் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் இல்லை என்பதை நிரூபிக்கும்,” என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்