ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா ராஜினாமா என்ற தகவலுக்கு மறுப்பு

துணை கவர்னர் விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்தார் என்ற தகவலுக்கு ஆர்.பி.ஐ. மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2018-12-10 14:13 GMT

மும்பை,

மத்திய அரசுடன் அதிகார மோதல் என்று தகவல்கள் வெளியான நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் திடீரென பதவி விலகியுள்ளார். தன்னுடைய சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார் உர்ஜித் படேல். இதற்கிடையே  
 ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யாவும் ராஜினாமா செய்துவிட்டார் என்று தகவல் வெளியாகியது. 

விரால் ஆச்சார்யா ஏற்கனவே மத்திய அரசை விமர்சனம் செய்து இருந்தார்.. “ரிசர்வ் வங்கிக்குரிய சுதந்திரத்தை மத்திய அரசு மதிப்பது கிடையாது. அதற்கான உரிய விலை கொடுப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார் விரால் ஆச்சார்யா. இப்போது விரால் ஆச்சார்யா ராஜினாமா என்ற செய்தியை ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.  “துணை கவர்னர் விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றது, தவறானது,” என ஆர்.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்