நாட்டில் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் எண்ணிக்கை 4,219; மக்களவையில் தகவல்

நாட்டில் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் எண்ணிக்கை 4,219 என மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-12-17 16:29 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரி சத்யபால் சிங் இன்று பதிலளித்து பேசினார்.

அவர் கூறும்பொழுது, நாட்டில் கலை, அறிவியல், வர்த்தகம் மற்றும் மருத்துவம் பயிற்றுவிக்கும் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் மொத்த எண்ணிக்கை 4,219 என தெரிவித்துள்ளார்.

இவற்றில் உத்தர பிரதேசம் அதிக அளவிலும் (843), ராஜஸ்தான் (684) மற்றும் தமிழகம் (383) ஆகியவை அடுத்த இடங்களிலும் உள்ளன.

மேலும் செய்திகள்