பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பு நிர்வாகியாக ராஜீவ் பிரதாப் ரூடி நியமனம்

முன்னாள் மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பு நிர்வாகியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2018-12-22 10:22 GMT
புதுடெல்லி,

கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில், பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவியை எதிர்த்து பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட ராஜீவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார்.

இதன்பின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் திறன் வளர்ச்சி துறைக்கான தனி பொறுப்பு அமைச்சரானார்.  தொடர்ந்து நடந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் இவரிடம் இருந்த மந்திரி பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், முன்னாள் மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பு நிர்வாகியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  இந்த நியமன அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்