உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது

உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில் ஒன்று தடம் புரண்டது.

Update: 2018-12-23 21:00 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 20 பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயில் ஒன்று நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கார்தோய் மாவட்டம் பகாவுலி ரெயில்வே நிலையம் அருகே சென்றபோது திடீரென அந்த ரெயில் தடம் புரண்டது.

இதனால் லக்னோ-மொராதாபாத் வழித்தடத்தில் செல்லும் பல ரெயில்கள் நிறுத்தப்பட்டன. லக்னோ-டெல்லி வழித்தடத்தில் செல்லும் 8 ரெயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும் 36 ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதிஅடைந்தனர். தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்