இந்த ஆண்டில் முதல் முறையாக சென்னையில் பெட்ரோல் விலை ரூ.72.48 22 காசு குறைந்தது

நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்த ஆண்டின் 4–வது காலாண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.86 பைசாவாக விற்பனையாகிறது. இதுதான் இந்த ஆண்டில் குறைவான விலையாகும். இதேபோன்று நாட்டின் முக்கிய நகரங்களில் 20 முதல் 22 பைசா பெட்ரோல் விலை குறைந்து உள்ளது.

Update: 2018-12-24 22:30 GMT

புதுடெல்லி,

சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.70 பைசாவாக விற்பனையானது. அது நேற்று 22 பைசா குறைந்து ரூ.72.48 ஆக விற்பனையாகிறது. இதேபோன்று சென்னையில் நேற்று முன்தினம் டீசல் லிட்டருக்கு ரூ.67.58 ஆக விற்பனையானது நேற்று 20 பைசா குறைந்து ரூ.67.38 ஆக விற்பனையானது. இந்த ஆண்டில் இது தான் குறைவான விலையாகும்.

மும்பையில் பெட்ரோல் லிட்டர் விலை ரூ.75.48 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.71.96 ஆகவும், பெங்களூருவில் ரூ.70.42 ஆகவும் விற்பனையாகிறது.

இதேபோன்று டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.63.83 ஆகவும், கொல்கத்தாவில் 65.59 ஆகவும், மும்பையில் ரூ.66.79 ஆகவும், பெங்களூருவில் ரூ.64.18 ஆகவும் விற்பனையாகிறது. சராசரியாக 18 முதல் 20 பைசா குறைந்து உள்ளது.

மேலும் செய்திகள்