நாடாளுமன்ற மக்களவையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தம் நிறைவேறியது

நாடாளுமன்ற மக்களவையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தம் நேற்று நிறைவேறியது.

Update: 2018-12-31 22:30 GMT
புதுடெல்லி,

மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பிரச்சினையில் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக நிர்வாகிகள் பலர் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வரை அந்த பணிகளை கவனிக்க ஒரு மேற்பார்வை குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு மாற்றாக நேற்று நாடாளுமன்ற மக்களவையில் இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா கூறும்போது, “இந்திய மருத்துவ கவுன்சில் முடிவுக்கு வந்ததால் அதன் அதிகாரங்கள் எய்ம்ஸ் இயக்குனர்கள் உள்பட சிறந்த நிபுணர்கள் அடங்கிய ஆட்சிமன்ற குழுவுக்கு வழங்கப்படு கிறது. இதன்மூலம் மருத்துவ கல்வி சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்