எம்.பி.க்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எம்.பி.க்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2019-01-08 22:15 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று வழக்கம்போல் கூடியது. அப்போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தொடர்பான சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் நடத்தப்பட்ட சி.பி.ஐ. விசாரணையை கண்டித்து அக்கட்சியின் எம்.பி.க்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்றும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவின் இருக்கைக்கு அருகில் வந்தும் கோஷமிட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். இதனால் தலைவர் சபையை நண்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார். அதன்பின்பு அவை கூடியதும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அடுத்தடுத்து 3 முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் உறுப்பினர்களின் தொடர் அமளியால் சபை நேற்று முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நேற்றுடன் முடிவடைய இருந்தது. முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்வதற்காக மாநிலங்களவை கூட்டம் இன்று(புதன்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்