தேநீர் தவிர எதுவும் உண்ணாமல் 30 வருடங்கள் முழு ஆரோக்கியமுடன் வாழும் அதிசய பெண்

சட்டீஸ்காரில் கடந்த 30 வருடங்களாக தேநீர் தவிர எதுவும் உண்ணாமல் முழு ஆரோக்கியமுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார்.

Update: 2019-01-12 13:53 GMT
கொரியா,

சட்டீஸ்காரில் கொரியா மாவட்டத்தில் பரதியா கிராமத்தில் வசித்து வருபவர் பில்லி தேவி (வயது 44).  இவர் தனது 11வது வயதில் கடைசியாக உணவு எடுத்து கொண்டுள்ளார்.  அதன்பின் அவர் உணவு உண்ணவில்லை.

இதுபற்றி அவரது தந்தை ரதி ராம் கூறும்பொழுது, என்னுடைய மகள் மாவட்ட அளவிலான போட்டி ஒன்றில் கலந்து கொள்ள சென்றாள்.  ஆனால் அவள் திரும்பி வந்தபொழுது, உணவு உண்பது மற்றும் குடிநீர் அருந்துவது ஆகியவற்றை துறந்து விட்டாள் என கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்பொழுது, இதன்பின்னர் அவள் பிஸ்கெட்டுகள் மற்றும் ரொட்டிகள் ஆகியவற்றை தேநீருடன் கலந்து உண்டு வர தொடங்கினார்.  அதிலும் சூரியன் மறைந்த பின்னர் நாளுக்கு ஒருமுறை கருப்பு தேநீர் குடிக்க தொடங்கினாள் என கூறியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல மருத்துவமனைகளுக்கு பில்லி தேவியை அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர்.  ஆனால் அவரது இந்த செயலுக்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியவில்லை என அவரது சகோதரர் பீஹாரி லால் ராஜ்வடே கூறியுள்ளார்.

இதுபற்றி மருத்துவர் எஸ்.கே. குப்தா கூறும்பொழுது, இது ஆச்சரியம் அளிக்கிறது.  விஞ்ஞான ரீதியில் கூறினால், 33 வருடங்களாக தேநீரை குடித்து ஒருவரால் உயிர் வாழ முடியாது.  நவராத்திரி திருவிழாவின்பொழுது 9 நாட்கள் தேநீரை குடித்து விட்டு விரதம் இருப்பது என்பது வேறு.  ஆனால் 33 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம்.  இது சாத்தியம் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்