டெல்லியில் கடும் பனி; 13 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கம்
டெல்லியில் கடும் பனியால் 13 ரெயில்கள் காலதாமதமுடன் வந்து சேரும் என தகவல் தெரிவிக்கின்றது.;
டெல்லி,
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலைகளில் பனி மூட்டம் அதிகரித்து தொலைதூரத்தில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த பனிப்பொழிவால் பள்ளி, கல்லூரி செல்வோர், பணிக்கு செல்லும் மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கடும் பனியால் 13 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றது.