உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு மனு - சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 8-ந்தேதி விசாரணை

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு மனு சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 8-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2019-02-08 21:15 GMT
புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் அஜய் சர்மா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தப்பட வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம், வாகனங்களில் எரிபொருள் வகையை குறிப்பிடுவதற்காக, ஒளிரும் வண்ண ஸ்டிக்கர் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் செயல். ஆகவே, மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, சுபாஷ் ரெட்டி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் 8-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்