தனக்கும், கட்சி சின்னத்துக்கும் சிலைகள்: சிலை வைத்ததற்கான செலவுகளை மாயாவதி திரும்ப செலுத்த நேரிடும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து

தனது கட்சி சின்னத்துக்கு சிலை வைத்ததற்கான செலவுகளை மாயாவதி திரும்ப செலுத்த நேரிடும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

Update: 2019-02-09 02:02 GMT
புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ரவிகாந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரியாக இருந்த 2008–2009 காலகட்டத்தில் மக்கள் பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து லக்னோ, நொய்டா ஆகிய இடங்களில் தனக்கும், தனது கட்சி சின்னமான யானைக்கும் சிலைகள் வைத்துள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாயாவதி மக்கள் பணத்தில் தனக்கும், தனது கட்சி சின்னத்துக்கும் சிலைகள் வைத்துள்ளார். இதற்காக அவர் செலவு செய்த பணத்தை திரும்ப செலுத்த நேரிடும் என கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 2–ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்