இந்தியாவின் மரபு மற்றும் கலாசாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக பசு உள்ளது; பிரதமர் மோடி

இந்தியாவின் மரபு மற்றும் கலாசாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக பசு உள்ளது என பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.

Update: 2019-02-11 09:25 GMT
பிருந்தாவன்,

பிரதமர் நரேந்திர மோடி பிருந்தாவன் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய அங்கம் பசு.  அதன் (பசு) பாலுக்கு கடனாக நாம் பதிலுக்கு எதுவும் திருப்பி தரமுடியாது.

இந்தியாவின் மரபு மற்றும் கலாசாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக பசு இருக்கிறது என கூறினார்.

தொடர்ந்து, அவற்றின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை தனது அரசு மேற்கொண்டு வருகிறது என வலியுறுத்தி கூறிய அவர், இதற்காக ராஷ்டீரிய கோகுல் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது என கூறினார்.

ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டில் ராஷ்டீரிய காமதேனு ஆயோக் நிறுவுவதற்கான முடிவை மத்திய பட்ஜெட்டில் தனது அரசு எடுத்து உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்