புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இன்னும் பள்ளதாக்கில்தான் உள்ளான்?

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இன்னும் பள்ளதாக்கு பகுதியில்தான் உள்ளான் என சந்தேகம் எழுந்துள்ளது.

Update: 2019-02-17 10:50 GMT


 புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர்களில் ஒருவரான அப்துல் ராஷீத் என சந்தேகிக்கப்படுகிறது. அவன் இப்போதும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில்தான் உள்ளான் எனவும் பாதுகாப்பு படைகள் சந்தேகப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து டிசம்பர் 9-ம் தேதி ஊடுருவி, புல்வாமா பகுதியில் தங்கியிருந்துள்ளான் என கூறப்படுகிறது.

புல்வாமா தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய நாள் பாதுகாப்பு படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். இந்த தாக்குதலின்போது அப்துல் ராஷீத் அங்கிருந்து தப்பித்துவிட்டான் எனவும் உளவுத்துறை வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானில் பயங்கரவாத இயக்கத்தில் பணியாற்றியவன், வெடிப்பொருட்களை தயார் செய்வதில் சிறப்பு திறன் பெற்றவன் என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்