200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

Update: 2019-02-21 05:12 GMT
புனே,

மராட்டிய மாநிலம் புனேவின் தோராங்தாலே கிராமத்தில் நேற்று மாலையில் 6 வயது சிறுவன் ரவி பண்டிட் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். சிறுவனின் தந்தை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுவன் அப்பகுதியில் விளையாடியுள்ளான். அப்போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்தனர். ஆய்வு செய்த போது சிறுவன் 10 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாக தெரியவந்தது. உடனடியாக மீட்பு பணியை வீரர்கள் தீவிரப்படுத்தினர். 

16 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான். சிறார்கள் ஆழ்துளை கிணற்றில் விழும் சம்பவங்கள் அவ்வப்போது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. பயனற்ற ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் அலட்சியம் காரணமாக இது தொடர்கதையாக உள்ளது.

மேலும் செய்திகள்